கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை

தமிழகத்திற்கு கூடுதல் ரெயில்களை இயக்குமாறு ரெயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது

Update: 2020-09-03 10:52 GMT
சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 7 ஆம் தேதி மாநிலத்திற்குள் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. 

ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கான டிக்கெட் முன்பதிவுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ரெயில்வே ஊழியர்கள் கணிணி பிரிண்டர் உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழகத்திற்கு கூடுதல் ரெயில்களை இயக்குமாறு ரெயில்வே வாரியத்திற்கு தமிழக  அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை - கன்னியாகுமரி, சென்னை-தூத்துக்குடி, சென்னை-மேட்டுப்பாளையம், சென்னை எழும்பூர் - செங்கோட்டை,   சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கும் ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் செய்திகள்