மணப்பாறை முதல் கைலாசா வரை: கைலாசா குறித்து வலம் வரும் மீம்ஸ்

சமீபத்தில் மணப்பாறை அருகே இருவேறு இடங்களிலும் திருமண நிகழ்ச்சிகளுக்காக கைலாசா வாசிகள் என்று இளைஞர்கள் விளம்பர பதாகைகள் வைத்திருந்தனர்.

Update: 2020-09-20 17:32 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரண்டு திருமண நிகழ்ச்சிக்கு கைலாசா வாசிகள் என்ற வாசகத்துடன் நித்யானந்தாவின் படத்தையும் வைத்து விளம்பர பதாகைகள் வைத்திருந்தனர். இதேபோல் சமீபத்தில் மணப்பாறை அருகே இருவேறு இடங்களிலும் திருமண நிகழ்ச்சிகளுக்காக கைலாசா வாசிகள் என்று இளைஞர்கள் விளம்பர பதாகைகள் வைத்திருந்தனர்.

இந்த அனைத்து பதாகைகளிலும் நோ சூடு, நோ சொரணை என்ற வாசகம் இடம் பெற்றிருந்ததுடன் இந்த விளம்பர பதாகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிலையில் தற்போது முகநூல் பக்கத்தில் மணப்பாறை முதல் கைலாசா வரை என்றும்... வழி: வையம்பட்டி என்றும் அரசு போக்குவரத்து கழகம்-கைலாசா என்ற வாசகங்கள் அடங்கிய பஸ்சில் இடது புறத்தில் நித்யானந்தா அமர்ந்திருப்பது போலும், வலது புறத்தில் வடிவேலு நடனமாடுவது போலவும் 2 பாடல்களுடன் வீடியோகவாக எடிட் செய்து அதை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதுபோன்ற கைலாசா தொடர்பாக மணப்பாறை பகுதியில் விளம்பர பதாகையில் தொடங்கி, வீடியோ எடிட் செய்து முகநூலில் பதிவிடுவது போன்றவை அனைவரின் கவனத்தையும் மீண்டும் ஈர்த்துள்ளதுடன் சமூக வலைதளங்களில் வேகமாகவும் பகிரப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகள்