வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு பலன் தரும் என்பதால் தான் முதலமைச்சர் ஆதரிக்கிறார் - வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு

வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு பலனளிக்க கூடியவை என்பதால் தான் முதலமைச்சர் அவற்றை ஆதரிக்கிறார் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-25 05:34 GMT
சென்னை,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில மாநிலங்களில் விவசாயிகள் இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் எதிர்கட்சிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சர் துரைக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் விவசாயிகளுக்கு பலனளிக்க கூடிய மசோதாக்கள் என்பதால் தான் முதலமைச்சர் அவற்றை ஆதரிக்கிறார் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்