அரியர் தேர்வு மாணவர் விவகாரம்: தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது - ஏஐசிடிஇ திட்டவட்டம்

அரியர் தேர்வு மாணவர் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏஐசிடிஇ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Update: 2020-09-30 07:17 GMT
சென்னை,

அரியர் தேர்வு மாணவர் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் கல்லூரி இறுதிப்பருவ தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

முன்னதாக அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து முன்னாள் துணை வேந்தர் பாலகுமாரசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஏஐசிடிஇ, இந்த பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

மேலும் செய்திகள்