மணல் கடத்தலில் ஈடுபட்ட 3,553 டிப்பர் லாரிகள் பறிமுதல் - தமிழக அரசு தகவல்

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3,553 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-10-17 09:16 GMT
மதுரை, 

மணல் கடத்தலில் ஈடுபட்ட 3,553 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 3,717 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 9 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 244 ஜே.சி.பி. இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக சட்ட விரோதமாக மணல் எடுப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நவ. 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்