அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா?

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Update: 2020-10-19 09:03 GMT
சென்னை, 

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% தனி இட ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தனி இட ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் வெறும் 4 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்கள் ஒற்றை இலக்கத்தில் தான் மருத்துவ படிப்பில் சேரும் நிலை உள்ளது. இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தால் இந்த நிலை மாறும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே ஆளுநர் ஒப்புதல் அளிக்காததும், வேடிக்கை பார்ப்பதும் துரோகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், 7.5 % தனி இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்