ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் 5 அமைச்சர்கள் சந்திப்பு

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் ஆளுநரை சந்தித்துள்ளனர்.

Update: 2020-10-20 07:02 GMT
சென்னை, 

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

மருத்துவ கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்துள்ளனர். 

மேலும் செய்திகள்