பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி: முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2020-11-11 20:26 GMT
சென்னை, 

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து, தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நல்லாட்சியே முற்போக்கான மாநிலத்தை உருவாக்கும். பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து, தங்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்தியுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். பீகார் மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில், “பீகாரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மையை பிடித்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆகியோருக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்