நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை - முதல்வர் பழனிசாமி

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை , அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

Update: 2020-11-24 11:22 GMT
சென்னை

நாளை நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள புயல் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

 தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை,அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் . நிவர் புயல் எதிரொலி : நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படும் .  புயல் கரையை கடக்கும்போது மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காகவே நாளை அரசு விடுமுறை விடப்படுகிறது.  பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  கடலோர மாவட்டங்களில் தனி கவனம் செலுத்தப்படுகிறது.

 மக்களுக்காக அரசு இருக்கிறது. எதிர்கட்சிகள் என்னவேண்டுமானாலும் பேசுவார்கள். நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிக்கப்படுவது குறித்து அரசு முடிவு செய்யும். புயல் கரையை கடக்கும்போது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்எனத் தெரிவித்தார். மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்  என கூறினார்.

மேலும் செய்திகள்