தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-12-22 03:23 GMT
சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்க கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். சென்னையை பொறுத்தமட்டில் வாகனம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்