வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

Update: 2021-01-10 06:01 GMT
கோப்புப்படம்
சென்னை, 

கொரோனாவை தடுக்க இந்தியாவில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதன்படி வருகின்ற 16ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக, மூன்று கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 16ம் தேதி மதுரையில் தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.   

கொரோனா தடுப்பூசி தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார். முன்னதாக தமிழகத்தில் 2 கட்டமாக தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்