மாநகராட்சியால் வேலைநீக்கம் செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளர்களை தொடர்ந்து பணியில் அமர்த்த வேண்டும் - கி.வீரமணி வேண்டுகோள்

மாநகராட்சியால் வேலைநீக்கம் செய்யப்பட்ட துப்புரவு தொழிலாளர்களை தொடர்ந்து பணியில் அமர்த்த வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-01-11 19:25 GMT
சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் தங்களது உயிரைப் பணயம் வைத்து 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், துப்புரவு பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்கள் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொழிலாளர் விரோத கொள்கையாகும். அரசு உடனடியாக தலையிட்டு இந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தொடர்ந்து பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்