தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிப்ரவரியில் 25ஆம் கட்ட விசாரணை துவக்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 25-ஆம் கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-01-22 09:24 GMT
கோப்பு படம்
தூத்துக்குடி,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 24ஆம் கட்ட விசாரணை நிறைவு பெற்றது.2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக   ஒரு நபர் விசாரணை ஆணையம் நடைபெற்று வருகிறது. இதில் 24 ஆம் கட்ட விசாரணை கடந்த 18ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. 

இதற்காக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், உள்ளிட்ட 56-பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் மற்ற அனைவரும் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரினார். 

இதுவரை நடந்த விசாரணையில் மொத்தம் 918 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 616 பேரிடம் நேரில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 25-ஆம் கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்