தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2021-01-28 05:58 GMT
சென்னை,

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயர்ந்து கொண்டே வந்தது. பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கமடைந்துள்ள நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

இந்தநிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.36,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,622-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் செய்திகள்