மார்ச் 01: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 93.11 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2021-03-01 01:40 GMT
கோப்புப்படம்
சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது.

இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 93.11 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்