562 பேருக்கு தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 500-ஐ கடந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 562 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-03-07 01:07 GMT
தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 20 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 141 முதியவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 243 பேரும், செங்கல்பட்டில் 49 பேரும், கோவையில் 48 பெரும், குறைந்தபட்சமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருப்பத்தூரில் தலா ஒருவரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அரியலூர், தர்மபுரி, பெரம்பலூரில் புதிதாக பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 560 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் சென்னையில் 221 பேரும், கோவையில் 59 பேரும், செங்கல்பட்டில் 53 பேரும் அடங்குவர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் சென்னையில் இருவரும், செங்கல்பட்டு, கோவையில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 54 ஆயிரத்து 554 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 517 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 லட்சத்து 38 ஆயிரத்து 85 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 3,952 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்