இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் மாற்றம்

இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் மாற்றம்.

Update: 2021-03-16 22:01 GMT
சென்னை, 

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் 3 தொகுதிகளுக்கு மட்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த வேட்பாளர்களுக்கு மாறாக தற்போது புதிய வேட்பாளர்களை நியமித்துள்ளோம்.

அதன்படி, அணைக்கட்டு தொகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தமிழ் அரசனுக்கு பதிலாக கே.ராஜசேகரும், விருத்தாசலம் தொகுதியில் அறிவிக்கப்பட்டு இருந்த மகாவீர் சந்துக்கு பதில் ஆர்.பார்த்தசாரதியும், கெங்கவல்லி (தனி) தொகுதியில் கிருஷ்ணவேணிக்கு மாற்றாக கே.பெரியசாமியும் புதிய வேட்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்