முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்து: மு.க.ஸ்டாலின் ஆஜராக 'சம்மன்' சென்னை கோர்ட்டு உத்தரவு

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு கருத்து: மு.க.ஸ்டாலின் ஆஜராக 'சம்மன்' சென்னை கோர்ட்டு உத்தரவு.

Update: 2021-03-17 21:04 GMT
சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கூறி அவர் மீது சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தனித்தனியாக 2 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், இந்த வழக்குகளை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அதேவேளையில், இந்த வழக்குகளில் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 16-ந் தேதி சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்