ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவில்லை; மத்திய அரசு மீது ப.சிதம்பரம் சாடல்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. ஓட்டெடுப்பை இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் புறக்கணித்தன.

Update: 2021-03-24 09:51 GMT
புதுடெல்லி,

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்த செயலுக்கு அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் தேர்தலில் தண்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-  “ஐ நா மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது. இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல்.  

இச்செயல் ஒன்றே போதும், அஇஅதிமுக-பாஜக கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.வெளியறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர்,  அரசின் வற்புறுத்தலால் ஐ நா மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தைப் புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்