திரையுலகின் உயரிய விருது வழங்கியதற்காக மத்திய அரசுக்கு, ரஜினிகாந்த் நன்றி

திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கியதற்காக மத்திய அரசுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-01 23:52 GMT
சென்னை, 

இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திரமோடிக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து, என்னை ஊக்குவித்த என்னுடைய பஸ் டிரைவரானநண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும்போது என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட்டுக்கும், என்னை திரையுலகுக்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் கே.பாலசந்தருக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.

நன்றி

என்னை மனமார்ந்து வாழ்த்திய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எதிர்க்கட்சித் தலைவரும், நண்பருமான மு.க.ஸ்டாலினுக்கும், நண்பர் கமல்ஹாசனுக்கும், மத்திய, மாநில அரசியல் தலைவர்களுக் கும், நண்பர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்