கொரோனா 2-வது அலை அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

கொரோனா 2-வது அலை அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்.

Update: 2021-04-08 23:57 GMT
சென்னை, 

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது, இந்தியா கொரோனா 2-வது அலையை சந்தித்து வருகிறது. எனவே, தமிழக மக்கள் தங்களது குடும்பத்தினர் மீது அக்கறை செலுத்த வேண்டுகிறேன். குறிப்பாக முதியோர்கள் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். பொது இடங்களில் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.

தகுதி உள்ளவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும், அதற்கு ஒத்துழைப்பு அளித்து வரும் பொதுமக்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வர ஒவ்வொருவரும் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்