தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கியது

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-04-10 13:07 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு மீண்டும் இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-  தமிழகத்தில் இன்று 5,989- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 26 ஆயிரத்து 816- ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,977- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்து இன்று 1,952-பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 23 ஆகும். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,886- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிய 84,546- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்