தேவையற்ற பயணத்தை தவிர்க்கலாம்: மெட்ரோ ரெயிலில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டும் அனுமதி

தமிழக அரசின் அறிவுறுதல்களின்படி கொரோனா வைரசை கட்டுப்படுத்த சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருகிற 6-ந்தேதியில் இருந்து வரும் 20-ந்தேதி வரை மெட்ரோ ரெயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Update: 2021-05-04 18:58 GMT
சென்னை, 

தமிழக அரசின் அறிவுறுதல்களின்படி கொரோனா வைரசை கட்டுப்படுத்த சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருகிற 6-ந்தேதியில் இருந்து வரும் 20-ந்தேதி வரை மெட்ரோ ரெயில்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

பயணிகள் மெட்ரோ ரெயில்களில் குறிக்கப்பட்டுள்ள எக்ஸ் குறியீடு இருக்கைகளை தவிர்த்து இடைவெளியுடன் அமர்ந்து பயணிக்க வேண்டும். பயணிகள் மெட்ரோ ரெயில்களில் நின்றபடி பயணம் செய்ய அனுமதி இல்லை. தற்போது வார நாட்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மெட்ரோ ரெயில் சேவைகள் உச்ச நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் பத்து நிமிட இடைவெளியிலும் இயக்கப்படுகிறது என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

பொதுமக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். 

மேலும் செய்திகள்