கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்

ஒரு மாதம் டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும்: கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்.

Update: 2021-05-05 21:04 GMT
சென்னை, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இல்லை என்று வெளியாகும் செய்தி வேதனையளிக்கிறது. கொரோனாவுக்கு போதிய சிகிச்சையின்றி நாள்தோறும் பல உயிர்கள் பலியாகி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஆங்காங்கே முகாம்கள் அமைத்து 18 வயதில் இருந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், வென்டிலேட்டர் போன்றவற்றை வரவழைத்து அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும்.

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்து போதிய நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும். மேலும், ஒரு மாத காலத்திற்கு டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக அடைத்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்