லட்சத்தீவு மக்கள் உணவு முறையில் தலையிடுவதா? மத்திய அரசுக்கு, ப.சிதம்பரம் கண்டனம்

லட்சத்தீவு மக்கள் உணவு முறையில் தலையிடுவதா? மத்திய அரசுக்கு, ப.சிதம்பரம் கண்டனம்.

Update: 2021-05-28 19:56 GMT
சென்னை,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு லட்சத்தீவை ஒரு காலனியைப் போல் நடத்துகிறது. அங்கு வாழும் சுமார் 70 ஆயிரம் மக்கள் மீது பா.ஜ.க. அரசு எவ்வளவு வெறுப்பும் காழ்ப்பும் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்கள் உணவு முறைகளில் அரசு தலையிடுவதற்கு அரசுக்கு எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது?

குற்றங்கள் மிக மிக அரிதான லட்சத்தீவில் மத்திய அரசு குண்டர் சட்டத்தை ஏன் கொண்டு வருகிறது? அங்கு வாழ்கின்ற சிறுபான்மைப் பிரிவு மக்களை அச்சுறுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை வன்மையாக நாட்டு மக்கள் அனைவரும் கண்டிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்