கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு

தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டு வந்தது.

Update: 2021-05-29 09:26 GMT
கோப்பு படம்
சென்னை, 

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக சென்னை கோயம்பேடு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வாரத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டு வந்தது.

அந்தவகையில் தற்போது தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு காய்கறிகள் தடையின்றி சப்ளை செய்வதற்கு ஏதுவாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், கோயம்பேடு மார்க்கெட் கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்திலேயே செய்யப்பட்டு இருக்கிறது. இதில் கடந்த 2 நாட்களாக கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

மேலும் செய்திகள்