சிறுமியை திருமணம் செய்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது

17 வயதான தனது உறவுக்கார சிறுமியை திருமணம் செய்த போலீஸ்காரரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-03 18:53 GMT
செங்குன்றம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா மைக்குடி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிகுமார்(வயது 27). இவர், 2016-ம் ஆண்டு போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். தற்போது மாதவரம் பால் பண்ணை போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

இவர், 17 வயதான தனது உறவுக்கார சிறுமியை கடந்த மாதம் 17-ந்தேதி சமயநல்லூரில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

போலீஸ்காரர் கைது

இது குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, இது தொடர்பாக மாதவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணகி, சிறுமியை திருமணம் செய்ததாக போலீஸ்காரர் பழனிகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்