மேட்டூர் அணை நீர்வரத்து நிலவரம்

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.83 அடியாக உள்ளது.

Update: 2021-06-06 04:28 GMT
கோப்புப்படம்
சேலம்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் 5.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.90 கன அடியில் இருந்து 96.83 கன அடியாக சரிந்துள்ளது. டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக 750 கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு மழையளவு 36.80 மி.மீட்டர் பதிவாகி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்வரத்து 555 கன அடியாக இருந்த நிலையில், இன்று 492 கன அடியாக சரிந்துள்ளது. மேலும் அணையின் நீர் இருப்பு 60.80 டி.எம்.சி.யாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்