தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்துள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்துள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2021-06-09 22:51 GMT
சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தற்போது சரிபாதியாக குறைந்துள்ளது.

அதேபோல் 42 ஆயிரம் எண்ணிக்கையில் படுக்கைகளும் காலியாக இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் 25 மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்துள்ளன. 4 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. 9 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

கிராமப்புறங்களில் பொதுமக்கள் தடுப்பூசிக்கு மிகப்பெரிய வரவேற்பை தந்துள்ளனர். மிக விரைவில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதுவரை கருப்பு பூஞ்சை நோயினால் 1,052 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு, அவர் வேறு ஒரு காரணத்தினால் உயிரிழந்துள்ளார் என இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது எனவும், இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் உண்மை அது அல்ல.

மேலும் செய்திகள்