378 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் 15,759 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 378 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-06-11 14:06 GMT
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 72 ஆயிரத்து 838 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8,769 ஆண்கள், 6,990 பெண்கள் என மொத்தம் 15 ஆயிரத்து 759 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 88 லட்சத்து 63 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  அதில் 23 லட்சத்து 24 ஆயிரத்து 597 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 240 பேரும், தனியார் மருத்துவமனையில் 138 பேரும் என 378 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 28 ஆயிரத்து 906 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 29,243 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 21 லட்சத்து 20 ஆயிரத்து 889 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 802 பேர் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 24087 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 23775 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 2335 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்