ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது - ஐகோர்ட் மதுரைக் கிளை

மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைக்க தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு தெரிவித்து விட்டது.

Update: 2021-07-01 08:54 GMT
மதுரை

தமிழக அரசின் அலுவல் ரீதியான அறிவிப்புகள், நிகழ்த்தப்படும் உரைகள் உள்ளிட்டவற்றில், ஒன்றிய அரசு என பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்  மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. கொரோனா தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்வதையே கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ள நிலையில், இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். 

மதுரை கிளை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட முடியாது. மேலும் மனுதாரர் தமிழக மக்களுக்கு எதனைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறார் என தெரியவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மேலும் செய்திகள்