அரசு நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம்: ரத்து செய்த பட்டாவை மீண்டும் வழங்கக் கோரி 83 பேர் மனு

அரசு நிலத்தை ஆக்கிரமித்த விவகாரத்தில் ரத்து செய்த பட்டாவை மீண்டும் வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் 83 பேர் மனு அளித்துள்ளனர்.

Update: 2021-07-02 08:01 GMT
காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமந்தங்கல் கிராமத்தில், சிலர் அனாதீனமான அரசு நிலத்தை முறைகேடாக பட்டா பெற்று, அதனை தேசிய நெடுஞ்சாலை பணிக்கு வழங்கி அதற்கு இழப்பீடும் பெற்றுள்ளனர். 

இதனிடையே பீமந்தங்கல் கிராமத்தில் அனாதீன நிலங்களை ஆய்வு செய்த மாவட்ட வருவாய்த்துறை, அங்கு இடம் வைத்துள்ள 83 பேரின் பட்டாக்களை ரத்து செய்தது. அவர்கள் இழப்பீடு பெற்ற வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 83 பேரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்து மனுக்களை அளித்தனர். 

அவர்களது மனுவில், தங்கள் நிலத்திற்கு 1972 முதல் பட்டா பெற்றுள்ளதாகவும், அனாதீன சொத்துக்கும் தங்கள் சொத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். முடக்கப்பட்டுள்ள தங்களது வங்கிக்கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்றும் ரத்து செய்த பட்டாவை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்