இடஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு: மாநில உரிமைக்கும், சமூக நீதிக்கும் எதிரானது - திருமாவளவன் அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-07-03 00:33 GMT
மராத்தா வகுப்பினருக்கு மராட்டிய மாநில அரசு 16 சதவீத இடஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிற்படுத்தப்பட்ட சாதிகளை கண்டறியவோ, பட்டியல்படுத்தவோ, பட்டியலை மாற்றியமைக்கவோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. அது மட்டுமின்றி, ஒட்டுமொத்த 
இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கு மேல் செல்லக்கூடாது என்ற தீர்ப்பும் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சமூக நீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான இந்த தீர்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது. சமூகநீதியைப் படுகொலை செய்யும் இந்த தீர்ப்பை மாற்றும் விதமாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி, சட்டசபையில் தி.மு.க. தலைமையிலான அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்