உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும் - ஜி.கே.வாசன்

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

Update: 2021-07-03 08:07 GMT
Image courtesy : Twitter/Panneerselvam
சென்னை

சட்டசபை தேர்தலில்  அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 6  தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், அனைத்து இடங்களிலும் வெற்றிவாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் சட்டசபைதேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக ஆழ்வார்பேட்டையில் நிருபர்களை  தமிழ்மாநில  காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வரும் 8ஆம் தேதி முதல்  11 டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செல்ல உள்ளேன்.  அ.தி.மு.க .கூட்டணி வெற்றிக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். 

தி.மு.க. ஆட்சி தொடங்கி 1 மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அரசின் முதல் பணியாக இருக்க வேண்டும் .  நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுக்கு இடையூறாக த.மா.கா. இருக்காது.

மத்திய அரசு என்பதைத்தான்  தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம். சொல் எதுவாக இருந்தாலும் மத்திய அரசின் பலத்தை அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ளது. அதை மாற்ற முடியாது, மேலும், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும் என்றும் வாசன் அறிவித்தார். 

மேலும் செய்திகள்