ஜூலை 03: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-07-03 14:48 GMT
கோப்புப்படம்
சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 24,92,420 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 24,23,606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,724 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 115 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 32,933 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் இன்று மேலும் 474 பேருக்கும், ஈரோட்டில் 360 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இன்று மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,33,224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 8,217 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3,33,22,908 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,60,194 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,24,76,704 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,58,619 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 35,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 14,56,793 பேர் ஆண்கள் (இன்று-2,319 பேர்), 10,35,589 பேர் பெண்கள் (இன்று-1,694 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம்:-



























மேலும் செய்திகள்