பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை முடிவு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை முடிவு.

Update: 2021-07-03 22:50 GMT
சென்னை,

தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. கடந்த 2014-ம் ஆண்டு தனது தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பிரசாரத்தின் போதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை பாதியாக குறைப்போம் என கூறி மத்திய அரசில் பொறுப்புக்கு வந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 109 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் ரூ.71.51 காசுகள், டீசல் ரூ.57.28 காசுகள், சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.422.44 காசுகள் ஆகவும் இருந்தது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 டாலராக உள்ளது. ஆனால் பெட்ரோல் விலை ரூ.102 ஆகவும், டீசல் ரூ.97, சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.850 ஆக உயா்ந்து உள்ளது. மத்திய அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி வருவதால் விலை உயர்ந்து வருகிறது. மத்திய அரசை கண்டித்து தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவையில் இணைந்துள்ள சங்கங்கள் மாவட்ட அளவில் கலந்து பேசி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்