கோவையில் 3 -ம் கட்ட ஆய்வில் 40 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

கோவையில் 3 -ம் கட்ட ஆய்வில் 40 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-07-12 06:28 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி உள்ளதா? என்பதை கண்டறிய சுகாதாரத்துறை சார்பில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதற்கட்ட ஆய்வும், கடந்த ஏப்ரல் மாதம் 2 -ம் கட்ட ஆய்வும், தற்போது 3 -ம் கட்ட ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் என 42 இடங்க ளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒவ்வொரு இடங்களிலும் 30 பேர் வீதம் என மொத்தம் 1,260 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட் டது. அதன் ஆய்வு முடிவில் கோவையில் 40 சதவீதம் பேருக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சுகாதார துறையினர் கூறுகையில், கோவையில் நடந்த முதல்கட்ட ஆய்வில் 22.15 சதவீதம் பேருக்கும், 2 -ம் கட்ட ஆய்வில் 20 சதவீதம் பேருக்கும், தற்போது நடந்த 3 -ம் கட்ட ஆய்வில் 40 சதவீதம் பேருக்கும் கொரோனா எதிர்ப்பாற்றல் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு 2 -வது அலையில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதும், தடுப்பூசி செலுத்தப்பட்டதும் காரணம் ஆகும். எனவே அடுத்த கொரோனா அலை வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றே கருதுகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்