மேகதாது விவகாரம்; அரசியலை கடந்து முடிவு எடுக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்

மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் ஆதாயங்களை கடந்து மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-16 13:04 GMT
சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நாடாளுமன்ற எம்.பி. சசிதரூர் கலந்து கொண்டார்.  இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் எம்.பி. சசிதரூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, பிரதமர் மோடி அரசின் நிர்வாகத்தில், நடப்பு ஜூலை மாதத்தில் 8வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு பிறகு கடந்த 2 மாதத்தில் 40 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.  கொரோனா தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி வழங்குவதிலும் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என அவர் கூறியுள்ளார்.

வருகிற 19ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடரில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து குரல் கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என்று எந்த ஒரு கோரிக்கையும் இல்லாத சூழலில், அப்படி பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில், அரசியலை கடந்து, இரண்டு மாநிலங்களும் சுமுகமாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

மேலும் செய்திகள்