ஏ.டி.எம். கொள்ளையை தடுக்கும் முயற்சியில் உயிரிழந்த தமிழரசன் குடும்பத்துக்கு வங்கி சார்பில் நிதி உதவி

ஏ.டி.எம். கொள்ளையை தடுக்கும் முயற்சியில் உயிரிழந்த தமிழரசன் குடும்பத்துக்கு வங்கி சார்பில் நிதி உதவி.

Update: 2021-07-20 20:10 GMT
சென்னை,

திருவாரூர் மாவட்டம் கீழகூத்தங்குடி கூடூரில் வசித்து வந்த தமிழரசன் என்பவர் சமீபத்தில், கூடூர் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் கொள்ளை முயற்சியை தடுக்கச் சென்றதில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்தநிலையில் கொள்ளை முயற்சியை தடுத்து நிறுத்துவதில் உயிரிழந்த தமிழரசன் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வங்கியின் சென்னை வட்டார பொதுமேலாளர் அமித் வர்மா, தமிழரசன் குடும்பத்துக்கு நிதி உதவிக்கான காசோலையை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘பாரத ஸ்டேட் வங்கி மனிதாபிமானத்துடனும், சமூக பொறுப்புடனும் எப்போதும் நடக்கும்’’ என்றார். காசோலையை பெற்றுக்கொண்ட தமிழரசன் குடும்பத்தினர் வங்கி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வங்கியின் திருச்சி மண்டல துணை பொதுமேலாளர் சிவகுமார், நாகை மண்டல மேலாளர் வி.பிரபாகர் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்