நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-07-21 03:58 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடிகள் ஆகும். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.51 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 14,514 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இன்று 35.79 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. கடந்த 3 நாள்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1.64 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்