தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-12-30 06:22 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள ஒலக்கூர் பணிமனையில் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) மதியம் 12.15 மணி முதல் மாலை 3.45 மணி வரையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66045), தொழுப்பேடு-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.விழுப்புரத்தில் இருந்து மேற்கண்ட தேதிகளில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் (66046), விழுப்புரம்-தொழுப்பேடு இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்