சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே வெளிநாட்டு கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ரவுடி கைது
ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை,
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த 2 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரையும் சோதனை செய்தபோது அவர்களிடம் வெளிநாட்டு கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கஞ்சா தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ரவுடி அமீருதின் எனவும், மற்றொரு நபர் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.