வள்ளி கும்மி நடனம் ஆடிய நயினார் நாகேந்திரன், அண்ணாமலை
கோவையில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் வள்ளி கும்மி நடனம் ஆடினர்.;
கோவை,
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
அதன்படி கோவை மலுமிச்சம்பட்டியில் நேற்று நயினார் நாகேந்திரன் 52-வது சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையொட்டி அங்கு தமிழக சட்டமன்றம் போன்று பிரசார மேடை அமைக்கப்பட்டு இருந்தது. தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர்.
அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களின் வள்ளிக்கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஆர்வத்துடன் பார்த்த மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலைஞர்களுடன் இணைந்து வள்ளி கும்மி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.