டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மேலாண்மை இயக்குனர் புதிய உத்தரவு

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மேலாண்மை இயக்குனர் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

Update: 2021-07-21 06:56 GMT
சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன், மண்டல, மாவட்ட மேலாளர்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்தார். 

அதன்படி கிடங்கிலும், டாஸ்மாக் கடைகளிலும் 90 நாட்களுக்கு மேல் மதுவகைகளை இருப்பு வைக்கக் கூடாது, குறிப்பிட்ட மதுவகைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அனைத்து மதுவகைகளையும் விற்பனை செய்ய வேண்டும், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மாவட்ட மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மதுபான கடைகளை அடிக்கடி மாவட்ட மேலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

கடைகளை திறப்பதற்கு முன்பு மேற்பார்வையாளர் உள்பட யாரெல்லாம் உள்ளனர் என்பதை புகைப்படம் எடுத்து தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கடைக்கு பணிக்கு வராத மேற்பார்வையாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மேலாண்மை இயக்குனர் அனுமதியின்றி யாருக்கும் இடமாறுதல் உத்தரவு வழங்கக் கூடாது என்றும் மதுபானக் கடைகளில் வெளிநபர்கள் யாரும் தங்க அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்