பெரம்பலூர் மாவட்டத்தில் 130-வது மாரத்தானை நிறைவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பெரம்பலூர் மாவட்டத்தில் 130-வது மாரத்தானை நிறைவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Update: 2021-08-10 23:00 GMT
பெரம்பலூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு நாளையொட்டி கடந்த ஆண்டு “கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்” போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்தியா உள்பட 28 நாடுகளில் 106 முக்கிய நகரங்களில் இருந்து 8 ஆயிரத்து 541 பேர் பங்கேற்றனர்.

அதேபோல் கருணாநிதியின் 3-வது ஆண்டு நினைவு நாளையொட்டி கடந்த 7-ந் தேதி 2-வது ஆண்டாக ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்' போட்டியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் பங்கேற்பவர்களுக்கான முன்பதிவை தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., சென்னை மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில் அன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய சென்றிருந்தார். அங்கு நேற்று அதிகாலை 5 மணியளவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21.1 கிலோ மீட்டர் தூரம் ஓடி, தனது 130-வது மாரத்தானை நிறைவு செய்தார். அப்போது சாலையோரை கடை ஒன்றில் கூழ் அருந்தினார்.

மேலும் செய்திகள்