அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம்; மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-08-16 22:39 GMT
தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற 100-வது நாளில் அனைத்து சாதியினரும், இந்து மத ஆலயங்களில் அர்ச்சகராக நியமனம் செய்யும் ஆணையை தமிழக மக்களுக்கு சமத்துவ பரிசாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். பெரியார் மறைந்தபோது, ‘இந்த சட்டம் நடைமுறைக்கு வரவில்லையே என்ற கவலை அவரின் நெஞ்சில் முள்ளாய் குத்தியது. அந்த முள்ளோடுதான் பெரியாரை புதைத்திருக்கிறோம்’ என்று கண்ணீர்மல்க கருணாநிதி குறிப்பிட்டார். அந்த முள்ளை அகற்றும் அரும்பெரும் சாதனையைத்தான் இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்று சாதனையாக நிகழ்த்தி காட்டி இருக்கிறார். அமைதிப் புரட்சியை, சமத்துவப் புரட்சியை, ரத்தம் சிந்தாப் புரட்சியை நிறைவேற்றி நமது அரசு பொதுநல அரசு என்று அகிலத்துக்கு பறைசாற்றி உள்ள தமிழக முதல்-அமைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும், அதிகாரிகள் முதலான அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்