டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்? - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

பெட்ரோலை போல டீசல் விலையை குறைக்காதது ஏன் எனும் கேள்விக்கு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-08-17 09:24 GMT
சென்னை,

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீது காரசார விவாதம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தொடரின்போது  பெட்ரோல் போல டீசல் விலையும் குறைப்பதில் தமிழக அரசு கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:-

டீசல் விலை குறைப்பின் பயன் மக்களுக்கு நேரடியாக கிடைக்குமா என்று சொல்லமுடியாது. பெட்ரோல் டீசல் உபயோகிப்பவர்களின் உரிய தகவல்கள் அரசிடம் இல்லை. பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் தகவல்கள் வழங்கவில்லை. அரசு ஆய்வு செய்ததில் 4 முதல் 5 வகையான பெட்ரோல் பயன்பாடு உள்ளதாக தெரிவித்தார். 

விலைகுறைப்பு எவ்வாறான பயனை அளிக்கிறது என்பது குறித்த விபரங்களை சேகரித்து வருவதாகவும், 30 நாட்களில் கிடைக்கும் தகவல்களை கொண்டு, பயன்தரக்கூடிய முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்தார்

மேலும் செய்திகள்