சென்னையில் தங்கம் விலை பவுன் ஒன்று ரூ.35,688க்கு விற்பனை
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு 32 ரூபாய் குறைந்து ரூ.35,688க்கு விற்பனை செய்யப்படுகிது.
சென்னை,
நாட்டில் கொரோனா பாதிப்புகள், நிதி நெருக்கடி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவை ஒருபுறம் இருந்தபோதிலும், நகைகள் வாங்குவதில் ஆர்வம் குறையாமல் காணப்படுகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4,465 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ. 35,720க்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து, கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.4,461 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று, தங்கம் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,688 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 66.70 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.66,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.