அவதூறு வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

அவதூறு வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-08-24 07:27 GMT
சென்னை,

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். 

இது சம்பந்தமான அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில்  ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது.

 வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதால் வழக்கில் ஆஜராக விலக்கு அளிக்க ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தனர்.  ஆனால், ஆஜராக விலக்கு அளிக்கக் கோரிய ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  மேலும், செப்டம்பர் 14-ம் தேதி ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆகிய இருவரும் ஆஜராக நீதிபதி அலீசியா உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்