குடிநீர் குழாய்க்கு மீட்டர் பொருத்துவதால் ஏழைகளுக்கு பலன் கிடைக்கும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

குடிநீர் குழாய்க்கு மீட்டர் பொருத்துவதால் ஏழைகளுக்கு பலன் கிடைக்கும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

Update: 2021-08-31 02:48 GMT
மதுரை,

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 168 பயனாளிகளுக்கு தானப்ப முதலி தெருவில் உள்ள பால் மீனாஸ் திருமண மகாலில் ரூ.18.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:-

குடிநீர் மீட்டர் வைப்பதால் ஏழைகளுக்கு பாதிப்பு இருக்காது.. யார் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவரும். குறைந்தளவு பயன்படுத்தும் ஏழைகளுக்கு கட்டணம் வாங்க கூடாது. அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். குடிநீருக்கு மீட்டர் வைப்பதால் ஏழைகளுக்கு பலன் தான் கிடைக்கும். 

தற்போது ஏழைகளுக்கும், வசதியானவர்களுக்கும் ஒரே கட்டணம் இருக்கிறது. பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கட்டணம் இருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் தகுதியுள்ளவர்கள் அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களை பெற முடியாத சூழல் இருந்தது. தற்போது அந்த நிலை மாறி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்